டிரெண்டிங்

மதுசூதனன் சொத்து மதிப்பு ஒன்றரைக்கோடி..... டிடிவி தினகரனுக்கு ரூ.74 லட்சம்

மதுசூதனன் சொத்து மதிப்பு ஒன்றரைக்கோடி..... டிடிவி தினகரனுக்கு ரூ.74 லட்சம்

webteam

ஆர்.கே.நகர் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.மதுசூதனனுக்கு மொத்தம் 1,49,53,941 ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 1,37,00,000 ரூபாய்க்கு அசையா சொத்து எனவும், 12,53,941 ரூபாய் அசையும் சொத்து எனவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

அதேபோல, திமுக வேட்பாளர் மருதுகணேஷின் மொத்த சொத்து மதிப்பு 12,57,845 ரூபாய் என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அசையா சொத்தாக 10,00,000 ரூபாயும், அசையும் சொத்தாக 2,57,845 ரூபாயும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடும்படியாக, டிடிவி தினகரனின் மொத்த சொத்து மதிப்பு 74,17,807 ரூபாய் என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 57,44,000 ரூபாய்க்கு அசையா சொத்துகள் இருப்பதாகவும், 16,73,799 ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.