டிரெண்டிங்

ஆர்.கே.நகரில் 77.68% வாக்குப்பதிவு

rajakannan

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவீதம் வாக்குகள் பதிவு நடைபெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 258 வாக்குச்சாவடிகளில், காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்நிலையில், மொத்தம் 77.68 சதவீதம் வாக்குகள் பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.  இதில் ஆண்கள் 84,195 பேர், பெண்கள் 92,862 பேர், மூன்றாம் பாலித்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர்.

இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது 74.59 சதவீதம் வாக்குகள் பதிவானதே அதிகமாக இருந்தது. 

முந்தைய வாக்குப்பதிவு நிலவரம்:-

2011: 72.67 (சட்டப்பேரவை தேர்தல்)
2014: 65.2 (மக்களவை தேர்தல்)
2015: 74.59 (இடைத்தேர்தல்)
2016: 67.69 (சட்டப்பேரவை தேர்தல்)

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட 59 பேர் போட்டியில் களத்தில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.