டிரெண்டிங்

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல்

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனு தாக்கல்

Rasus

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மருதுகணேஷ் இன்று தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் மருதுகணேஷ் வேட்பு மனுவை அளித்தார். மாவட்டச் செயலாளர் சுதர்சனம், சேகர்பாபு எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் அவருடன் இருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போதும், திமுக சார்பாக மருதுகணேஷ் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பணப்பட்டுவாடா புகார் காரணமாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் போட்டியிட்டு 57,673 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.