டிரெண்டிங்

ஆர்.கே நகரில் இன்று வாக்குப்பதிவு

ஆர்.கே நகரில் இன்று வாக்குப்பதிவு

webteam

ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

வாக்குப்பதிவுக்காக, வாக்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அத்துடன் அனைத்து வாக்குச்சாவடிகளும் பதட்டமானவை என்பதால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள், 950 துணை ராணுவ படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 15 துணை ராணுவ படை வீரர்களும், ஒரு மத்திய அரசு ஊழியரும், ஒரு நுண் பார்வையாளரும் இடம்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நீதிமன்றம் அறிவித்ததுபடி, தேர்தல் வாக்குப்பதிவு முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவடைய உள்ளது. மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.