சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் 3 உதவி செயற்பொறியாளர்கள் தலைமையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 1913 மற்றும் 1800 4257012 என்ற இலவச தொலைபேசி எண்கள் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். மேலும், 75502 25820, 75502 25821 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது.