டிரெண்டிங்

மோடி அரசு வெற்று வாக்குறுதிகளின் அரசு: லாலு பிரசாத்

மோடி அரசு வெற்று வாக்குறுதிகளின் அரசு: லாலு பிரசாத்

webteam

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் தவறானவை என்று நிரூபணம் ஆகியுள்ளது, எனவே அவற்றை திரும்பப் பெற வேண்டும். நாட்டில் ஜனநாயகம் பின்தங்கி சர்வாதிகாரம் முன்னிலை பெற்றுள்ளது. மோடி அரசு வெற்று வாக்குறுதிகளின் அரசு என்பதை நிரூபித்துள்ளது. அவசரநிலை போன்ற நிலை நாட்டில் தற்போது நிலவுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடு ஒரு மோசமான பின் விளைவை சந்தித்து வருகிறது என்று கூறினார்.