மு.க.ஸ்டாலின் திமுகவுக்கு செயல் தலைவராக ஆக முடியுமே தவிர, ஜார்ஜ் கோட்டைக்கு தலைவராக முடியாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், தமிழக அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், அதிமுக அரசு குறித்து ஸ்டாலின் தவறான கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், தேர்தல் விரைவில் வரும் என அவர் கனவு காண்பதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், மு.க.ஸ்டாலின் திமுகவுக்கு செயல் தலைவராக ஆக முடியுமே தவிர, ஜார்ஜ் கோட்டைக்கு தலைவராக முடியாது என கூறினார்.