டிரெண்டிங்

“ராகுல் விலகல் புத்தம் புதிய நாடகம்” - பாஜக முக்தார் அப்பாஸ் நக்வி  

webteam

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி தெரிவித்திருப்பது பழம்பெரும் கட்சியின் புத்தம் புதிய நாடகம் என பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி விமர்சித்துள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தா‌ம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் ராகுல் கூறினார். 

மேலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும், எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

 தனது ராஜினாமா குறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டார். உடனடியாக அவருடைய ட்விட்டர் பயோவில் காங்கிரஸ் தலைவர் என்பதை ராகுல்காந்தி நீக்கினார். காங்கிரஸ் தலைவர் என இருந்ததை காங்கிரஸ் உறுப்பினர் என மாற்றினார்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் நக்வி கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி தெரிவித்திருப்பது பழம்பெரும் கட்சியின் புத்தம் புதிய நாடகம் என பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வி விமர்சித்தார். 

ராகுல் காந்தியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதாவின் மற்றொரு தலைவரான ஜவடேகர், பாரதிய ஜனதாவை பொறுத்தவரை கட்சிப் பதவிகளுக்கான தேர்தல் அட்டவணை தெளிவாக இருப்பதாகவும், மற்ற கட்சியில் எதுவும் நடைபெறவில்லையென்றல்தான் என்ன செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.