ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்கி எழுபவரா
நீங்கள்... அப்படியென்றால் நீங்கள் உங்கள் தூக்க முறையை மாற்ற வேண்டும் என்கிறது மருத்துவ ஆய்வுகள். ஒரே மாதிரியான தூக்க நேரத்தை பின்பற்றாதவர்களுக்கு
மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் 26 சதவிகிதம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ottawa பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நாள்தோறும் ஒரே நேரத்தில், தூங்கி எழுபவர்களை விட, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரத்தில் தூங்கி எழுபவர்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. தூக்கத்தில் ஏற்படும் மாற்றம் உடலில் பல்வேறு குழப்பங்களுக்கு வழி வகுத்து, மூளையின் செயல்பாடுகள் பாதிக்க காரணமாகி விடுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.