டிரெண்டிங்

”இந்த பாஸ்வேர்டை கிராக் செய்ய ஒரு நொடியே அதிகம்தான்” -உலகின் வீக் பாஸ்வேர்ட் எது தெரியுமா?

JananiGovindhan

கூகுள் மெயில் உள்ளிட்ட எந்த சோசியல் மீடியா கணக்காக இருந்தாலும் சரி எதாவது முக்கியமான இணையதளத்திற்கான கணக்காக இருந்தாலும் சரி பாஸ்வேர்ட் இடுவது என்பதே பெரிய வேலையாகத்தான் இருக்கும். ஒவ்வொரு தளத்துக்கும் ஒவ்வொரு விதமான கடவுச் சொற்களை பயன்படுத்தினாலும் அதனை நினைவில் வைத்துக்கொள்வது அதைவிட சவாலான வேலைதான்.

இப்படி பாஸ்வேர்ட்கள் எங்கும் எதிலும் இருப்பதால் நம் கணக்கை யார் என்ன செய்துவிடுவார்கள் என ஒரே மாதிரியான அல்லது மிகவும் எளிமையான கடவுச்சொல்லையே வைப்பது வழக்கம். ஆனால் முறையான பாஸ்வேர்ட் வைக்காததன் காரணமாக மில்லியன் கணக்கானோரின் தனிப்பட்ட தரவுகளும் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படும் நிகழ்வுகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இப்படி இருக்கையில் நோர்ட்பாஸ் என்ற குழு மேற்கொண்ட ஆய்வில் பொதுவான அல்லது மிகவும் எளிமையான பாஸ்வேர்ட்களை கொண்டுள்ள கணக்குகளை நொடியில் ஹேக்கர்களால் ஹேக் செய்துவிட முடியும் என்று தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது.

2019ல் தொடங்கப்பட்ட இந்த நோர்ட்பாஸ் என்ற பாஸ்வேர்ட் மேனேஜர் பயனர்களின் பாஸ்வேர்ட்களை நிர்வகித்து அதனை பாதுகாப்பாக encrypted பாஸ்வேர்ட் வால்ட்டாகவும் வைக்கும் வேலையை செய்து வருகிறது.

இந்த நிறுவனம்தான் கடந்த 2021ம் ஆண்டு ஒரே பாஸ்வேர்டைதான் மக்கள் பயன்படுத்துகிறார்களா என்று ஆராய்ந்த போதுதான் 200 கடவுச்சொற்கள் ஒரே மாதிரி இருப்பதை அறிந்துக்கொள்ள முடிந்தது என நோர்ட்பாஸ் தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்த 200 எளிமையான பாஸ்வேர்டை பயன்படுத்தும் பயனர்களின் கணக்கை ஹேக் செய்ய வெறும் ஒரு நொடி மட்டுமே போதும் என்றும், அப்படிப்பட்ட சுலபமான பாஸ்வேர்ட்கள் எத்தனை முறை ஹேக் செய்யப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக
'123456789' ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் கிராக் செய்யப்படுகிறதாம்.

இதுபோக, 2022ம் ஆண்டிலும் இந்த பாஸ்வேர்ட் வைப்பதில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்வில்லை எனக் கூறியிருக்கும் நோர்ட்பாஸ், '123456', 'Password' மற்றும் 'Qwerty' போன்ற பலவீனமான கடவுச்சொற்களை மில்லியன் கணக்கான மக்கள் இன்னமும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகளில் பலவீனமான கடவுச்சொல்லாக '123456' முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பட்டியலில் நான்காவது மோசமான கடவுச்சொல் 'password இருக்கிறது. பயனர்கள் தங்கள் கடவுச்சொல்லை 'password'என்றே இடுகிறார்கள். இதனை கிராக் செய்ய சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு வினாடிக்கும் குறைவான நேரமே ஆகும் என்றும் நோர்ட்பாஸ் தெரிவித்துள்ளது.