அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஒப்புதலோடு அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வைத்திலிங்கம் நீக்கப்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செலயாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக-வின் ஓபிஎஸ் மற்றம் ஈபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தன. அப்போது பேசிய அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம், அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். பொதுச்செயலாளரை நீக்க வேண்டுமானால் அதிமுக-வின் பொதுக்குழு கூட வேண்டும். எனவே பொதுக்ழுழு விரைவில் கூடும் போது அதிமுக பொதுச் செயலாளரரை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வைத்திலிங்கம் நீக்கப்படுவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். பொதுச் செயலாளர் சசிகலா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே தன்னை அதிமுக கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் டிடிவி தினகரனுக்கு இல்லை எனவும், அவரை தாங்கள் எப்போதோ நீக்கிவிட்டோம் எனவும் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.