அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு தன்னை தேர்ந்தெடுத்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு தன்னை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடத் தயாராக இருக்கிறேன். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதே டெங்கு பரவக் காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.