தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி அக்கட்சியின் நிர்வாகிகள் சார்பில் குன்றத்தூர் கோயிலில் சிறப்பாடு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தேமுதிக தலைமை கூறினால் இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார் எனக் கூறினார். தலைமை எது சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன். யாருக்கும் பயமில்லை என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர், “ அதிமுக பேனர் விழுந்ததால் அது சர்ச்சையானது. ஒரு தனியார் பேனர் விழுந்திருந்தால் அது இந்தளவு சர்ச்சையாகி இருக்காது என நினைக்கிறேன். பேனர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றினால் சரியாக இருக்கும். பேனர் விவகாரத்தில் நடிகர் விஜய் கூறியது அவருடைய சொந்தக் கருத்து”எனவும் தெரிவித்தார்.