டிரெண்டிங்

RCB vs KKR: இறுதி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது பெங்களூர்!

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் ஆறாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் டூப்ளசி பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது பெங்களூர். முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்தது ஆர்.சி.பி. அனுஜ் ராவத், டூப்ளசி, கோலி என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூவரும் விக்கெட்டை இழந்தனர். டேவிட் வில்லி மற்றும் ரூதர்ஃபோர்டு 45 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இக்கட்டான சூழலில் அமைந்த அந்த கூட்டணி பெங்களூருக்கு பெரிதும் கை கொடுத்தது. ஷாபாஸ் அகமது 20 பந்துகளில் 27 ரன்களை விளாசியிருந்தார்.  

இறுதி ஓவர் வரை இந்த ஆட்டத்தை நகர்த்தி சென்றிருந்தனர் கொல்கத்தா வீரர்கள். 19.2 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது பெங்களூர். இந்த சீசனில் அந்த அணிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது. பெங்களூருக்கு தேவைப்பட்ட வெற்றிக்கான ரன்களை தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரது பேட்டிலிருந்து வந்தது.