டிரெண்டிங்

ஐபிஎல் வரலாற்றில் மோசமான வரலாறு படைத்த RCB vs PBKS அணிகள்: என்ன காரணம்?

EllusamyKarthik

ஐபிஎல் அரங்கில் மோசமான வரலாறு படைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள். நடப்பு சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் இது அரங்கேறியுள்ளது. இரு அணிகளும் தலா 200+ ரன்கள் எடுத்திருந்தன. இரு அணி பேட்ஸ்மேன்களும் அதிரடியாக இந்த ஆட்டத்தில் விளையாடி இருந்தனர். இருந்தாலும் பவுலர்கள் சரியாக பந்து வீச தவறி விட்டனர். 

இரு அணியின் பவுலர்களும் மொத்தமாக 45 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்திருந்தனர். Bye, Leg Bye, Wide என இந்த உதிர (Extras) ரன்கள் அடங்கும். இதில் பஞ்சாப் 23 ரன்களும், பெங்களூர் 22 ரன்களும் கொடுத்திருந்தது. மொத்தம் 33 Wide பால் இதில் அடங்கும். 

ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்களை எக்ஸ்ட்ராவில் கொடுத்த போட்டியாக அமைந்துள்ளது இந்த போட்டி. இதற்கு முன்னதாக கடந்த 2008-இல் ஒரே போட்டியில் 38 ரன்கள் எக்ஸ்ட்ராவாக கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் விளையாடி இருந்தன.