வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார் 360 டிகிரி பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸ். சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்துள்ள அவர் ஐபிஎல் தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் தற்போது வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதை வீடியோவாகவும் அவர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அவரது பயிற்சியை ரெகார்ட் செய்து கொண்டிருந்த ஐபோன் மீது டிவில்லியர்ஸ் ஆடிய ஷாட் ஒன்று பட்டுள்ளது. அதனால் அந்த போன் சேதமியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதை தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ள ஏபிடி. ‘ஐபோன் அவுட்’ என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.