டிரெண்டிங்

இங்கிலாந்து ராணிக்கு பிடித்தமான பிங்க் வைரம்.. எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா?

JananiGovindhan

வைரங்களின் ராஜாவாக கருதப்படுவது இளஞ்சிவப்பு நிற வைரம்தான். (Pink Diamond) மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணிக்கு மிகவும் பிடித்தமான இந்த இளஞ்சிவப்பு வைரம் 57 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டிருப்பதாக ஹாங்காங்கின் சோதேபி ஏல நிறுவனம் அறிவித்திருக்கிறது.

நேற்று (அக்.,7) ஹாங்காங்கில் நடந்த இந்த ஏலத்தில் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம் 57 மில்லியன் டாலர் அதாவது 412 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது சர்வதேச அளவில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அந்த பிங்க் வைரத்தின் எடை 11.5 காரட் கொண்டது.

172 கோடி செலவாகும் என்று நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ஆனால், எதிர்பார்த்ததை விட விலை உயர்ந்ததால், நிறுவன மேலாளர்கள் ஆச்சரியமடைந்தனர். இவ்வளவு பெரிய விலைக்கு விற்கப்படும் இரண்டாவது வைரம் இதுவாகும்.

ஃப்ளோரிடாவின் Boca Ratonல் இருந்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர் இந்த 11.5 காரட் பிங்ஸ் ஸ்டார் வைரத்தை ஏலத்தில் வாங்கிருக்கிறார். 49.9 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அந்த வைரம் வரிகளோடு சேர்த்து 57.7 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது.

இந்த வைரக்கல் ஏலத்தில் விற்கப்பட்ட இரண்டாவது பெரிய இளஞ்சிவப்பு வைரமாகும். இளஞ்சிவப்பு வைரங்கள் விலைமதிப்பற்ற ரத்தினங்களில் மிகவும் அரிதானவை மற்றும் உலக சந்தையில் மிகவும் தேவைப்படுபவையாக இருப்பதாகவும் நகை விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு 2017ம் ஆண்டில் ஏலத்தில் விடப்பட்ட 59.60 காரட் பிங்க் நிற நட்சத்திர வைரம் ரூ. 587.84 கோடிக்கு ஏலம் போனது. 23.60 காரட் வில்லியம்சன் வைரம் 1947 ம் ஆண்டு மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு திருமண பரிசாக வழங்கப்பட்டது.

இந்த இளஞ்சிவப்பு வைரம்தான் இரண்டாம் எலிசபெத் விரும்பி அணியும் நகையாக இருந்திருக்கிறது. தனது வெள்ளி விழா கொண்டாட்டங்கள் உட்பட பல நிகழ்வுகளில் குயின் எலிசபெத் அந்த வைரத்தை அணிந்திருக்கிறாராம்.