நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கிறார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்றுடன் விடைபெறும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.