கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு 100 ரூபாய் வீதம் பணம், அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார். இவர் நேற்று பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் ஏர்வாடி அருகேயுள்ள காவாகுளம் பகுதியில் வாக்கு சேகரித்து விட்டு கிளம்பிய பின் கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு அதிமுகவினர் சார்பில் 100 ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கூட்டத்திற்கு வந்த பெண்கள் 100 ரூபாய் பணத்தை வாங்க ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச் சென்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் அதிமுகவினர் மீது தேர்தல் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்களா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.