தமிழக அரசை கலைக்க முகாந்திரமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் முதல்வருக்கு எதிராக மனு அளித்துவிட்டு புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இது குறித்து கவர்னர் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் டெல்லி சென்று நேற்று நிதியமைச்சர் அருண் ஜேட்லியையும், இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசினர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அமைச்சர்களுடன் சென்ற தம்பிதுரை கூறியுள்ளார்.
இந்நிலையில் ராஜ்நாத் சிங் தமிழக அரசு பிரதிநிதிகளிடம் தமிழக அரசை கவிழ்க்க வேண்டிய முகாந்திரமில்லை. தினகரன் ஆதரவு எம்எல்ஏ புகார் உட்கட்சி விவகாரம். இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் குடியரசுத் தலைவர் மற்றும் கவர்னரை ஏன் இழுக்க வேண்டும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.