டிரெண்டிங்

மக்களே மன்னித்துவிடுங்கள் - ரஜினிகாந்த்

மக்களே மன்னித்துவிடுங்கள் - ரஜினிகாந்த்

rajakannan

ரசிகர்களின் பேனர்களால் ஏற்பட்ட இடையூறுக்கு மக்களிடம் ரஜினி காந்த் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

சென்னையில் தனியார் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை திறந்து வைத்தார். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை திறப்புக்குப் பின் கல்லூரி மாணவர்கள், மக்கள் மத்தியில் ரஜினி உரையாற்றினார்.  

நிகழ்ச்சியில் பேசத் தொடங்கும் போதே, சாலையில் ரசிகர்ள் அளவுக்கு அதிகமாக பேனர்கள் வைத்திருந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறினார். சாலையில் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நாம் மீறியுள்ளோம் என்றே நினைக்கிறேன் என்றார் ரஜினி. 

மேலும், எம்.ஜி.ஆர். சிலையை திறக்கும் தகுதி எனக்கு இருக்கா என்ற எண்ணம் இருந்தது என்றும் ஏசி சண்முகம் கேட்டு கொண்டதற்காகவே ஒத்துக் கொண்டதாகவும் அவர் கூறினார்.