கட்சிப் பதவிகளை தொழிலாக வைத்துள்ளனர் என நடிகர் ரஜினி தெரிவித்தார்.
சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த முறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தகவல்கள் மாவட்ட நிர்வாகிகள் மூலம் வெளியே வரவில்லை. அதை நான் பாராட்டுகிறேன். 1996 ல் இருந்து நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிதான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன்.
கட்சிப் பதவிகளை தொழிலாக வைத்துள்ளனர் .அது கெட்டது; மக்களுக்கு ரொம்ப கெட்டது. சிஸ்டத்தை சரி செய்யாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றது. ‘இவர்கள் ஏன் அரசியலுக்கு வர மாட்டேன் என்கிறார்கள்’ என மக்கள் நினைப்பவர்களின் வீட்டுக் கதவை தட்டி அவர்களை அரசியலுக்கு கூப்பிடுவேன்” எனத் தெரிவித்தார்.