டிரெண்டிங்

ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி: அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு

ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார் ரஜினி: அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு

Rasus

நடிகர் ரஜினிகாந்த் நாளை முதல் ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார். இதனால் அவரின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நாளை முதல் 31-ம் தேதி வரை 6 நாட்களுக்கு 18 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்திக்கிறார். இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் கன்னியாகுமரி, நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களது கருத்துகளை ரஜினி கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் இறுதி நாளான மே 19-ம் தேதி போர் வரும் வரை காத்திருங்கள் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்பத்தியது. இந்நிலையில் மீண்டும் ரசிகர்கள் சந்திப்பு நடக்கிறது.

முன்னதாக சில நாட்களுக்கு முன் தமிழருவி மணியன், ரஜினிகாந்த்தை சந்தித்து பேசியிருந்தார். அப்போது அரசியலில் நுழைவது குறித்து டிசம்பர் 31-ம் தேதி ரஜினி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.