டிரெண்டிங்

இமயமலையில் குதிரையில் உலா வரும் ரஜினி

இமயமலையில் குதிரையில் உலா வரும் ரஜினி

webteam

இமயமலையில் ரஜினி குதிரையில் உலா வரும் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளன.

கடந்த சனிக்கிழமை அன்று நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் சென்றார். அங்கே 15 நாள்கள் தங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. பாபா குகையின் அருகே அவரது நண்பர்களுடன் சேர்ந்து அவர் ஒரு சத்திரம் கட்டியிருக்கிறார். யாத்ரைக்காக வருபவர்கள் அங்கே தங்கிக் கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன் அதன் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது ரஜினியால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் விரைவில் அவர் வந்து தங்க இருப்பதாக நண்பர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில்தான் ரஜினி இப்போது அங்கு பயணம் சென்றுள்ளார். முறைப்படி அரசியல் பிரவேசம் செய்வதற்கு முன்பாக அவர் அங்கே சென்றிருப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் அவர் திரும்பியதும் அதிரடித் திருப்பங்கள் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அநேமாக அவர் ஏப்ரல் 14 அன்று தனது கட்சியை முறையாக அறிவிக்கலாம் எனத் தெரிகிறது. அவரது கட்சியின் முத்திரையே பாபாவை அடையாளமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஹிமாலயாவில் உள்ள யோகி பரமஹன்ச ஆன்மிக ஸ்தத்தையும் பாபாவின் குகைகளையும் தர்சித்துவிட்டு வந்த கையோடு அவர் தன் அடுத்தக்கட்ட பிரவேசத்தை தொடங்ககூடும் என்கிறார்கள். இதனிடையே தான் அவர் ஹிமாலயாவில் குதிரையில் பயணம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியாகி உள்ளன.