டிரெண்டிங்

மன்றத்திற்காக இணையதளம் தொடங்கினார் ரஜினி

மன்றத்திற்காக இணையதளம் தொடங்கினார் ரஜினி

webteam

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பதிவு செய்ய இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், “அனைவருக்கு எனது அன்பார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். எனது அரசியல் பிரவேசத்திற்கு அமோக வரவேற்பை அளித்துள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத ரசிகர் மன்ற உறுப்பினர்கள், தங்கள் மன்றத்தின் விபரங்களுடன் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும், தங்களின் பெயர், வாக்களர் அடையாள அட்டை எண் இவை இரண்டையும் ‘ரஜினி மன்றம்’ என்ற பெயரில் உள்ள ஆண்ட்ராய்டு இணையதள செயலியிலோ அல்லது http://www.rajinimandram.org என்ற வலைதள பக்கத்திலோ பதிவு செய்து மன்றத்தின் உறுப்பினர் ஆகலாம். நாம் அனைவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்குவோம்.” என்று தெரிவித்துள்ளார்.