டிரெண்டிங்

“தமிழ்நாட்டு சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் ” ரஜினி பேட்டி

“தமிழ்நாட்டு சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும் ” ரஜினி பேட்டி

webteam

தமிழ்நாட்டில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய விரும்புகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். 

சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் சிஸ்டம் சரி இல்லை என்று கூறினீர்களே அது தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை நாடு முழுவதுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தமிழ்நாட்டில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். மேலும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ரசிகர்களை சந்தித்தபோது “சிஸ்டம் கெட்டுப்போச்சே. அத முதல்ல மாற்றணும்” என்று ரஜினிகாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.