டிரெண்டிங்

கமல்ஹாசனின் அரசியல் பாணி வேறு: ரஜினிகாந்த்

கமல்ஹாசனின் அரசியல் பாணி வேறு: ரஜினிகாந்த்

கமல்ஹாசன் இன்று ரஜினிகாந்தை போயஸ் தோட்ட இல்லத்தில் திடிரென சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இது வெறும் நட்பு ரீதியலான சந்திப்பு, அரசியல் இல்லை என தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “சினிமாவிலேயே என்னுடைய பாணியும், கமல்ஹாசனின் பாணியும் வேறானது. அதுபோலவே அரசியலில் என்னுடைய பாணியும் நண்பர் கமல்ஹாசனின் பாணியும் வெவ்வேறானது. ஆனால், மக்களுக்கு நல்லது செய்யவே கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார். கமல்ஹாசன் பணத்துக்காகவே, புகழுக்காகவோ அரசியலுக்கு வரவில்லை. அவருடைய இந்த அரசியல் பயணம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறேன். கமல்ஹாசனுக்கு ஆண்டவனின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும்” என்றார்.