டிரெண்டிங்

ரஜினி ரசிகர் மன்றத்திற்காக தனி ட்விட்டர் கணக்கு தொடக்கம்

webteam

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத்திற்காக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என நேற்று அறிவித்தார். அத்துடன் தனிக்கட்சி தொடங்கி வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து புத்தாண்டு பிறந்த தினமான இன்று தனது வீட்டின் வெளியே வந்து ரசிகர்களுக்கு வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இன்று மாலை தனது ரசிகர் மன்றத்திற்காக புதிய இணையதளம் ஒன்றை ரஜினிகாந்த் தொடங்கினார். 

அந்த இணையதளத்தில், பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத ரசிகர் மன்ற உறுப்பினர்கள், தங்கள் மன்றத்தின் விபரங்களுடன் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும், தங்களின் பெயர், வாக்களர் அடையாள அட்டை எண் இரண்டையும் ‘ரஜினி மன்றம்’ என்ற பெயரில் இணைக்கச் சொல்லியிருந்தார். இதற்கிடையே ரஜினியின் ரசிகர் மன்றத்திற்காக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதனை ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் பின்தொடர்ந்து வருகின்றனர்.