டிரெண்டிங்

ராஜஸ்தான் Vs கொல்கத்தா: இன்றையப் போட்டியில் வெற்றி யாருக்கு?

ராஜஸ்தான் Vs கொல்கத்தா: இன்றையப் போட்டியில் வெற்றி யாருக்கு?

jagadeesh

மும்பையில் இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 18-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் இரு அணிகளுமே தலா 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளன. தற்போதைய நிலையில் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி 6-ஆவது இடத்திலும், ராஜஸ்தான் அணி 8வது இடத்திலும் உள்ளன. கடந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தாலும், கடுமையாக போராடியது கொல்கத்தா. அது அந்த அணிக்கு புத்துணர்வை தந்திருக்கும்.

ஆனால் இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, அதன்பிறகு விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை கண்டுள்ளது. எனினும் இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை மிகுந்த நம்பிக்கையோடு கொல்கத்தா அணி சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ராஜஸ்தான் அணி கடைசி 2 ஆட்டங்களில் தோற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் களம் காணுகிறது.

கொல்கத்தா அணியை பொருத்தவரை தொடக்க வீரர்கள் சரியாக விளையாட வேண்டும். மிக முக்கியமாக சுப்மன் கில் பார்முக்கு திரும்ப வேண்டும். மேலும் கேப்டன் மார்கனும் சிறப்பான பங்களிப்பை கொடுக்க வேண்டிய அழுத்தத்தில் இருக்கின்றனர். அதேபோல ராஜஸ்தானை பொருத்தவரை சஞ்சு சாம்சனும், பட்லரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். மேலும் அணியில் இளம் வீரர்களும் கைகொடுத்தால் ராஜஸ்தான் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும்.