டிரெண்டிங்

பிளே ஆஃப் வாய்ப்பு எந்த அணிக்கு கிடைக்கும்? ராஜஸ்தான் - கொல்கத்தா மோதல் !

பிளே ஆஃப் வாய்ப்பு எந்த அணிக்கு கிடைக்கும்? ராஜஸ்தான் - கொல்கத்தா மோதல் !

jagadeesh

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் இந்த சீசனில் தலா 13 ஆட்டங்களில் விளையாடி தலா 6 வெற்றிகளைப் பெற்றுள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெல்லும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். அதேநேரத்தில் தோற்கும் அணி ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேற நேரிடும். மொத்தத்தில் இரு அணிகளுக்கும் இது வாழ்வா, சாவா ஆட்டமாகும்.

மேலும் சென்னை - பஞ்சாப் அணியின் ஆட்டத்தின் முடிவு ராஜஸ்தான் - கொல்கத்தாவுக்கு அனுகூலமாக அமைய வேண்டும். இவ்விரு அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்புக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் கடைசி லீக் ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு ஆட்டங்கள் ‘டை’யில் முடிந்துள்ளன.