டிரெண்டிங்

ரயில்வே பட்ஜெட்: கடந்தாண்டு நிதி ஒதுக்கீடும், தமிழகத்தின் திட்டங்களும்!

ரயில்வே பட்ஜெட்: கடந்தாண்டு நிதி ஒதுக்கீடும், தமிழகத்தின் திட்டங்களும்!

jagadeesh

பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பொது பட்ஜெட்டுடன் ரயில்வேக்கான நிதி நிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். கடந்தாண்டு இந்திய ரயில்வேக்கு ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன். இதில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய ரயில்வே உள்ளிட்ட மொத்தம் 17 மண்டலங்களுக்கும் இந்த நிதி பிரித்து வழங்கப்படும்.

இதில் தெற்கு ரயில்வே துறைக்கு மட்டும் ரூ.4,057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தெற்கு ரயில்வேயிக்கு நேரடியாக ரூ.2,876 கோடியும், கடன் மற்றும் கடன் பத்திரம் வெளியீட்டுக்கு ரூ.1,181 கோடி என மொத்தம் ரூ.4,057 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே தெற்கு ரயில்வேக்கு 2019 - 2020 இல் ரூ.4118 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்தாண்டு சற்று குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 10 திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது அதிர்ச்சி தந்தது ரயில்வே நிர்வாகம்.

தமிழகத்தில் திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழனி, சென்னை - கடலூர்- மாமல்லபுரம், மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி, கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக்கோட்டை, மொரப்பூர் - தர்மபுரி, ராமேஷ்வரம் - தனுஷ்கோடி, சத்தியமங்கலம் - மைசூர் ஆகிய திட்டங்களுக்குத்தான் தலா ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கெல்லாம் இந்தாண்டு கூடுதல் நிதி அளிக்கப்பட்டதால்தான் புத்துயிர் பெறும் சூழல் உருவாகியுள்ளது.

நாடு முழுவதுக்குமான அறிவிக்கப்பட்ட சில பொதுவான திட்டங்கள்!

விவசாயிகளின் விளைபொருள்களை கொண்டு செல்ல உருவாக்கப்படும் கிஷான் ரயில், குளிர்பதன வசதி கொண்டதாக இருக்கும்.

மும்பை - அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வரும் புல்லட் ரயில் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள ரயில்வே வழித்தடங்கள் குறிப்பாக ரயில் நிலையங்களில் சோலார் வசதி செய்து தரப்படும்.

ரயில்வேயில் தனியாரின் பங்கேற்பை ஊக்குவிக்கும் விதமாக அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 150 தனியார் ரயில்களை இயக்க வழி வகை செய்யப்படும்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும் வருமானத்தை பெருக்குவதற்காகவும் அதிகளவிலான தேஜாஸ் வகையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.

சதாப்தி வகையிலான உட்காரும் வசதி கொண்ட ஏசி ரயில்களும் நாடு முழுவதும் இயக்கப்படும்.

நாடுமுழுவதும் உள்ள ஆயிரம் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும்.

பெங்களூர் நகரில் புறநககர் ரயில் வசதி ஏற்படுத்தி தரப்படும். மெட்ரோ பாணியில் தனியாருடன் இணைந்து சுமார் ரூ18000 கோடி செலவில் புறநகர் ரயில் வசதி ஏற்படுத்தி தரப்படும்.

2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்வே வழித்தடங்களும் மின்மயமாக்கப்படும் என தெரிவித்திருந்தது.