டிரெண்டிங்

ராகுல் தலைமையில் காங்கிரஸ் பலவீனமடையும்: தமிழிசை சவுந்தரராஜன்

ராகுல் தலைமையில் காங்கிரஸ் பலவீனமடையும்: தமிழிசை சவுந்தரராஜன்

webteam

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் 87-ஆவது தலைவராக ராகுல்காந்தி இன்று பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி என கட்சி தலைவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். மேலும், தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ராகுலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காங்கிரஸ் கட்சியில் குடும்ப அரசியலின் ஆதிக்கமே தொடர்வதாகவும் குற்றம்சாட்டினார். அதே போல் ராகுல் காந்தி ஏற்கனவே காங்கிரஸ் துணைத்தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் என்றும் அவர் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல், அவரது தொகுதியில் ஒரு பஞ்சாயத்தில் கூட ஜெயிக்க முடியவில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.