காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் இன்று நடைபெறுகிறது.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு பின்பு வெளியான குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆரம்பமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராகுல் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், குஜராத் தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைத்த இடம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவை சந்திக்க காரணமான, 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை மக்களிடம் சென்று சேர்ப்பது குறித்து விரிவாக திட்டமிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.