டிரெண்டிங்

அருண் ஜெட்லிக்கு கிட்னி ஆப்ரேஷன் - விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து

அருண் ஜெட்லிக்கு கிட்னி ஆப்ரேஷன் - விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து

rajakannan

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அருண் ஜெட்லி விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அருண் ஜெட்லி, கடந்த ஒரு மாதமாக டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அருண்ஜெட்லி தனக்கு உடல்நிலை கோளாறு இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அருண் ஜெட்லிக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அறுவை சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை முதல்வர் ஆர்த்தி விஜ் கூறுகையில், “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. கிட்னியை பெற்று கொண்டவரும், கொடுத்தவரும் நலமாக உள்ளனர். அவர்கள் விரைவாக குணமடைந்து வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.

அருண் ஜெட்லிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதற்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டரில், “டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.