புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன் என்று உருக்கமாக பேசினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதையொட்டி அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பாரதிதாசன் கல்லூரி மாணவிகளிடையே கலந்துரையாடினார்.
அப்போது, ‘’என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஆனால் எனது தந்தையை கொன்றவர்கள் மீது எந்தக் கோபமும் இல்லை; நான் அவர்களை மன்னித்துவிட்டேன்’’ என்று உருக்கமாக பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில், 7 பேர் விடுதலைக் குறித்து முடிவெடுப்பது தொடர்பாக குழப்பம் நிலவிவரும் நிலையில் ராகுல்காந்தி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.