டிரெண்டிங்

நாளை காங். காரிய கமிட்டிக் கூட்டம்: தலைவர் ஆகிறார் ராகுல்

நாளை காங். காரிய கமிட்டிக் கூட்டம்: தலைவர் ஆகிறார் ராகுல்

webteam

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதற்கான அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்க, அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை கூடுகிறது. இதன் மூலம் ‌அக்கட்சியின் புதிய தலைவராக ராகுல் பதவியேற்பார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய காரிய கமிட்டி கூட்டம் திங்கட்கிழமை காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல்காந்தி அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இந்தத் தேர்தலில் ராகுல் காந்தியை தவிர, வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள் என தெரிகிறது. அவ்வாறு யாரும் போட்டியிட முன்வரவில்லை என்றால், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.