டிரெண்டிங்

ஓட்டு வாங்க இந்து கோயில்களில் ராகுல் வழிபாடு: பாஜக விமர்சனம்

ஓட்டு வாங்க இந்து கோயில்களில் ராகுல் வழிபாடு: பாஜக விமர்சனம்

rajakannan

குஜராத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்து கோயில்களுக்கு ராகுல் காந்தி செல்வதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. 

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் அங்கு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வடக்கு குஜராத்தின் மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரச்சாரத்தை தொடங்கும் முன்பு காந்திநகரில் உள்ள அக்சர்தம் கோயிலில் ராகுல் காந்தி இன்று காலை வழிபாடு செய்தார். 

இந்நிலையில், குஜராத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்து கோயில்களுக்கு ராகுல் காந்தி செல்வதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. ராகுலின் இத்தகைய ஏமாற்று வேலைகள் பலிக்காது என்று குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல் கூறியுள்ளார். இதற்கு முன் குஜராத் வந்தபோதெல்லாம் ராகுல் காந்தி கோயில்களுக்குச் செல்லாதது ஏன்? என்றும் நிதின் படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.