டிரெண்டிங்

குடியரசு தின விழாவில் ராகுலுக்கு 4வது வரிசையில் இடம்

குடியரசு தின விழாவில் ராகுலுக்கு 4வது வரிசையில் இடம்

rajakannan

டெல்லியில் நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தின விழாவில் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்திக்கு நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் செங்கோட்டை, நாடாளுமன்ற வளாகம், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வான் வழியாகவும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி டெல்லி நகரம் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தின விழாவில் ராகுல் காந்திக்கு நான்காவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ளனர். ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படாமல் இருப்பது சரியானது அல்ல, ஜனநாயகத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.