டிரெண்டிங்

முத்தமிட்ட தொண்டர் - இயல்பாக அன்புடன் சிரித்த ராகுல்..!

முத்தமிட்ட தொண்டர் - இயல்பாக அன்புடன் சிரித்த ராகுல்..!

rajakannan

கேரளாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு, தொண்டர் ஒருவர் முத்தமிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய சொந்த நாடாளுமன்ற தொகுதியான வயநாட்டில் இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, வாயநாடு தொகுதியில் காரில் ஊர்வலாக சென்று கொண்டிருந்தார். காரின் முன்பகுதியில் அவர் அமர்ந்திருந்தார்.

அப்போது, தொண்டர்கள் வரிசையாக வந்து அவரிடம் கைகுலுக்கி சென்றனர். அதில் ஒரு தொண்டர் திடீரென ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அந்த தொண்டரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொண்டர் முத்தமிட்டதை இயல்பாய் எடுத்துக் கொண்ட ராகுல், அடுத்தடுத்து வருபவர்களுக்கு கைகுலுக்கினார்.

ராகுல் காந்திக்கு தொண்டர் முத்தமிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தொகுதியை பார்வையிடுவதற்காக ராகுல் காந்தி இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.