டிரெண்டிங்

காங்கிரஸ் தலைவரானார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவரானார் ராகுல் காந்தி

webteam

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று வரை, ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 47 வயதான ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து வரும் 16ஆம் தேதி ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கிறார். இதுவரை இருந்த தலைவர்களிலேயே ராகுல் காந்திதான் இவ்வளவு இளம் வயதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 132 ஆண்டு வரலாற்றுடன் இந்தியாவின் பழமையான கட்சியாக திகழும் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக தலைமை வகித்து வந்தார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து அதிக காலம் தலைவராக இருந்தவர் என்ற பெருமை பெற்றவர் சோனியா காந்தி.