டிரெண்டிங்

போலீஸார் தள்ளு முள்ளில் கீழே விழுந்த ராகுல் காந்தி !

போலீஸார் தள்ளு முள்ளில் கீழே விழுந்த ராகுல் காந்தி !

Sinekadhara

உத்தர பிரதேச மாநிலத்தில் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணமடைந்தார். இதுகுறித்து நாடு முழுவதும் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்திய பிரதேச அரசு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. அதனால் அந்த கிராமத்திற்குள் ஊடகங்களுக்கு அனுமதி கிடையாது எனவும், அந்த மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க அந்த கிராமத்திற்குச் செல்வதாக அறிவித்திருந்தனர். 144 தடை உத்தரவை மீறி பிற்பகல் வேளையில் ராகுலும், பிரியாங்காவும் சென்றதால், அவர்கள் சென்ற காரை அதிகாரிகளும், போலீஸாரும் வழிமறித்தனர். அவர்களுக்கிடையே நடந்த தள்ளுமுள்ளால் ராகுல் காந்தி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

மேலும் தடை உத்தரவை மீறி கிராமத்திற்குள் சென்ற குற்றத்திற்காக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கைது செய்யபட்டுள்ளனர். மேலும் போலீஸார் அவரை லத்தியால் அடித்ததாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.