டிரெண்டிங்

களத்தில் கலீல் அகமதுவுடன் மோதல்.. திவாட்டியா விளக்கம்..

JustinDurai

களத்தில் கலீல் அகமது உடனான மோதல் குறித்து விளக்கம் தெரிவித்துள்ளார் திவாட்டியா. 

நேற்று முன்தினம் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, கடைசி ஓவரை கலீல் அகமது வீசினார்.

அந்த ஓவரின் நான்காவது பந்தில் ராகுல் திவாட்டியா சிங்கிள் அடித்தார். அப்போது ரன் ஓடி முடிக்கும்போது, கலீல் அகமது, ராகுல் திவாட்டியாவிடம் ஏதோ சொல்ல, திவாத்தியா அவருக்கு பதிலடி கொடுத்தார். அவர்கள் இருவருக்கு இடையே மோதல் ஏற்படவே, அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார் ரியான் பராக்.

இதையடுத்து போட்டி முடிந்ததும், அம்பயரிடம் சென்று சன் ரைசர்ஸ் கேப்டன் வார்னர், ஆக்ரோஷமாக ஏதோ புகார் கூறுவதுபோல பேசிவிட்டு, பின்னர் கலீல், ராகுல் திவாட்டியாவிடம் சென்று பேசினார். பின்னர் வார்னர், திவாட்டியாவை தட்டிக்கொடுத்து அனுப்ப, அதன்பின்னர் கலீல் அகமது,  திவாட்டியாவின் தோள்மீது கைபோட்டு சமாதானமாகி சென்றனர்.

பின்னர், ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்ட திவாட்டியாவிடம், இரு வீரர்களுக்கிடையேயான விவாதம் குறித்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், இதுவொரு பெரிய விஷயமில்லை. நாங்கள் அப்போது ஒரு சூடான விவாதத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அவ்வளவுதான்.  இதுபோன்ற சூழ்நிலைகளில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன”என்று திவாட்டியா கூறினார்.