ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரபலமான நபர் ஒருவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டையில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இடைத்தேர்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சியின் தேர்தல் பணிக்குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். பிரபலமான ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் தமிழிசை தெரிவித்தார். சென்ற முறையும் ஆர்.கே.நகர் தொகுதியில் திரைத்துறைப் பிரபலமான கங்கை அமரனை பாஜக தனது வேட்பாளராக நிறுத்தி இருந்தது.