டிரெண்டிங்

பாலபாரதியை பொம்பளை எனக் கூறியதற்கு கிருஷ்ணசாமி கூறும் விளக்கம் என்ன?

பாலபாரதியை பொம்பளை எனக் கூறியதற்கு கிருஷ்ணசாமி கூறும் விளக்கம் என்ன?

webteam

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை பொம்பளை என தாம் கூறியதில் எந்த தவறும் இல்லை என்று புதியதமிழகம் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணசாமி, ’பொம்பளை என்று சொல்வதில் என்ன தவறு? அவர்கள் என்ன தொணியில் கேட்கிறார்களோ, அந்த தொணியில் பதில் சொல்கிறேன். அவங்க பொம்பளைதானே.. பொம்பளை இல்லை என்று சொல்லிவிட்டால் வேறு மாதிரி பேசலாம். முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை பொம்பளை என தாம் கூறியதில் எந்த தவறும் இல்லை. பாலபாரதியின் உருவபொம்மையை எரிப்பது மட்டுமல்லாமல், இன்னும் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது’எனத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், கிருஷ்ணசாமியின் மிரட்டல்களை அஞ்சாமல் எதிகொள்ள தயாராக உள்ளதாக பாலபாரதி கூறியிருக்கிறார்.