புதிய தலைமுறை
புதிய தலைமுறை புதிய தலைமுறை
டிரெண்டிங்

Youtube-ல் ஒரு கோடி சந்தாதாரர்களுடன் ‘புதிய தலைமுறை’- குரலற்றவர்களின் குரலுக்கு கிடைத்த அங்கீகாரம்!

PT WEB

புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 13 வருடங்கள் மற்றும் டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டு 11 வருடங்கள் ஆகின்றன. தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சற்றும் ஓய்ந்துவிடாமல் ஆயிரம்கால் பாய்ச்சலில் வேகமாக முன்னேறி வருகிறது புதிய தலைமுறை.

புதிய தலைமுறை

உண்மை உடனுக்குடன் என்ற நோக்கில் செய்திகளில் பிழை இன்றியும், சமரசம் இன்றியும், சார்பு இன்றியும் தொடர்ந்து நடுநிலையோடு செயல்பட்டு வருகிறது புதிய தலைமுறை.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், டிஜிட்டல் பார்வையாளர்களுக்கென பிரத்யேகமான பல்வேறு நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. K Questions, PT International, PT National, PT Digital explainers, தளபதி, World Cup 2023, எதையாவது பேசுவோம், PT Talks, The political SPYder, Pt digital voice என பிரத்யேக நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

இதைத் தாண்டி தினசரி செய்திகள், நேர்ப்பட பேசு தொகுப்புகள், சிறப்பு நேர்காணல்கள், Big story, நயம்படச் சொல், குற்றம் குற்றமே, வட்டமேசை, அக்னி பரிட்சை, வீடு போன்ற தொலைக்காட்சி exclusive நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன் போர், ஆசிய விளையாட்டுப்போட்டிகள், நடப்பு உலகக்கோப்பை தொடர், சந்திரயான் 3, ஆதித்யா எல்.1, கர்நாடக சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு பட்ஜெட் 2023 - 2024 போன்ற நிகழ்வுகளில் பல்வேறு விவரங்களையும் விரிவாக ஆராய்ந்து உடனுக்குடன் வழங்கியது புதிய தலைமுறை.

மேலும் ஒடிசா ரயில் விபத்து, ஆந்திர சம்பவம், இஸ்ரேல் பிரச்னை, சந்திராயன் 3 சாதனை போன்றவற்றில், களத்திலிருந்தே தகவல்களை சேகரித்து பிரத்யேகமாக நேயர்களுக்கு கொடுத்தது!

தொடர்ந்து சமரசம் இன்றியும், சற்றும் சளைக்காமலும் உழைத்ததன் பலனாய் புதிய தலைமுறை யூ டியூப் தளம், ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை தற்போது பெற்றுள்ளது.

இது உங்களால் சாத்தியமானது. இந்த வெற்றி உங்களுக்கானது.

இந்த வெற்றியை உங்களோடு பகிர்ந்து கொண்டு உங்களோடு கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது புதிய தலைமுறை.