டிரெண்டிங்

திருச்சியில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு

திருச்சியில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு

Rasus

புதிய தமிழகம் கட்சியின்  இளைஞர் அணி மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சி தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, இன்று திருச்சியில் மாநில இளைஞர் அணி மாநாடு நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய கிருஷ்ணசாமி, பிரிட்டிஷ் காலத்தில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலில் சேர்த்ததை கண்டித்து அதற்கு நஷ்ட ஈடு கேட்டு நவம்பர் 15-ஆம் தேதி பிரிட்டிஷ் அலுவலகத்தை நோக்கி பேரணி நடைபெறும் என்றும், கோரிக்கையை வலியுறுத்தி தேவைப்பட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இம்மாநாட்டில் தேவேந்திர குல அடையாள மீட்பு, பட்டியல் இனத்திலிருந்து வெளியேற வேண்டும் உள்ளிட்ட ஏழு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.