ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஷார்ஜாவில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் பஞ்சாப் அணி 13 போட்டிகளிலும், பெங்களூரு அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இன்றையப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதை அறிவோம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச அணி
தேவ்தத் படிக்கல்
ஆரோன் பின்ச்
விராட் கோலி
ஏபிடி வில்லியர்ஸ்
குர்கீரத் சிங் மன்
ஷிவம் துபே
வாஷிங்டன் சுந்தர்
உதானா
நவ்தீப் சைனி
கிறிஸ் மோரிஸ்
சஹால்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் உதச்தேச அணி
மயாங்க் அகர்வால்
கே எல் ராகுல்
நிகோலஸ் பூரன்
கிளன் மேக்ஸ்வெல்
மன்தீப் சிங்
ஜேம்ஸ் நீஷம்
சர்பராஸ் கான்
முருகன் அஸ்வின்
முகமது ஷமி
காட்ரெல்
ரவி பிஷ்னோய்