டிரெண்டிங்

பரிதாப நிலையில் பஞ்சாப் காங்கிரஸ்: பின்னடைவை சந்தித்த முக்கிய தலைவர்கள்

பரிதாப நிலையில் பஞ்சாப் காங்கிரஸ்: பின்னடைவை சந்தித்த முக்கிய தலைவர்கள்

JustinDurai

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் வேட்பாளர் சன்னி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலையில் இருந்தது. ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த கட்சியின் 13 வேட்பாளர்கள் மட்டுமே முன்னிலையில் இருந்தனர்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். காலை 11 மணி நிலவரப்படி சித்து மூன்றாவது இடத்தில் இருந்தார். அதேபோல் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, அவர் போட்டியிட்ட இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளான சம்கவுர் சாஹிப் மற்றும் பதௌர் ஆகிய இரு தொகுதிகளிலும் பின்தங்கியுள்ளார். அதேபோல முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங்கும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இதையும் படிக்க: மணிப்பூர் தேர்தல்: முன்னிலையில் பாஜக; 'கை'விட்டதா காங்கிரஸ்?