டிரெண்டிங்

முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் காங்கிரஸில் இருந்து விலகல்

Veeramani

பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அஸ்வனி குமார் எழுதிய கடிதத்தில், "இந்த விவகாரத்தில் எனது சிந்தனையை பரிசீலித்ததன் மூலம், தற்போதைய சூழ்நிலை மற்றும் எனது கண்ணியத்திற்கு ஏற்ப, கட்சிக்கு வெளியே பெரிய தேசிய விவகாரங்களை என்னால் சிறப்பாக கையாள முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

69 வயதான அஸ்வனி குமார் 2012 அக்டோபர் 28 முதல் 2013 மே 11 வரை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்தார். 2013 இல் ஜப்பானுக்கான சிறப்புத் தூதராக அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கால் நியமிக்கப்பட்டார்.

இவரின் விலகல் தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், அஸ்வனி குமாரின் ராஜினாமா வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை பாதிக்காது என்று கூறினார்.