டிரெண்டிங்

திமுக வேட்பாளருக்கு நூதன முறையில் வாக்கு சேகரித்த புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா

kaleelrahman

புதுக்கோட்டை நகராட்சி 16-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே எஞ்சியுள்ளதால் களத்தில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சி 16-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ஹவ்வாகனி நைனாமுகமதுக்கு ஆதரவாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது காலணி தைக்கும் தொழிலாளியுடன் அமர்ந்து அவரிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் அந்த வார்டில் உள்ள ஜூஸ் கடையில் ஜூஸ் போட்டு கொடுத்தும் தேநீர் கடையில் தேநீர் போட்டு கொடுத்தும் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டார். வெல்டிங் பட்டறையில் வெல்டிங் அடித்து வித்தியாசமான முறையில் வாக்காளர்களை கவரும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.